மேலும் செய்திகள்
ஜெபமாலை வழிபாடு பங்கு மக்கள் பங்கேற்பு
28-Oct-2025
பந்தலூர் நவ.-1--: பந்தலூர் தேவாலயத்தில் நடந்த தொடர் ஜெபமாலையில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பந்தலூர் புனித சவேரியார் தேவாலயத்தில், தொடர் ஜெபமாலை பங்குத்தந்தை பெனட்டிக்ட் தலைமையில் நேற்று காலை சிறப்பு பிரார்த்தனையுடன் துவங்கியது. தொடர் ஜெபமாலையில் உலகம் அமைதி பெற வேண்டும், மத நல்லிணக்கம் ஏற்பட்டு மக்கள், ஒற்றுமையுடன் வாழ வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மேலும் அன்னை மரியாளின் வழியாக, இயேசுவிடம் இருந்து வரங்களைப் பெற்றுத் தரவும், பல்வேறு நாடுகளில் நிலவும் போர் தணிந்து அமைதி பெறவும் தொடர் ஜெபமாலை செய்தனர். தொடர்ந்து பங்குத்தந்தை மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
28-Oct-2025