உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஊட்டி : ஊட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.பெருமாளை வழிபடுவதற்கு உகந்த மாதம் புரட்டாசி. அதில், முதல் புரட்டாசி சனிக்கிழமையையோட்டி, மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் காலை, 7:00 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.அதில், ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அர்ச்சகர்கள் சசிகாந்த, வினய் ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். ஊட்டி வேணுகோபால சுவாமி கோவில், வண்டிச்சோலை லட்சுமி நாராயண சுவாமி கோவில் உட்பட ஊட்டி சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை