மேலும் செய்திகள்
கீழ் கோத்தகிரி பகுதியில் அதிகபட்ச மழை பதிவு
22-Oct-2024
கோத்தகிரி ; கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டங்களில், வளர்ந்துள்ள களை செடிகளை அழிக்க பூச்சி மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால், தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் களைச் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. களைச் செடிகளை அகற்றாத பட்சத்தில், தோட்டங்களுக்கு விவசாயிகள் இடும் உரம் வீணாகிறது. இதனால், களைச் செடிகளை அகற்றுவது அவசியம்.கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு அதிகப்பட்சமாக, 28 முதல், 30 ரூபாய் வரை விலை கிடைத்தது. தற்போது, விலை மூன்று வாரங்களில் குறைந்து, 25 ரூபாய் மட்டும் கிடைக்கிறது. தோட்ட பராமரிப்பு செலவினங்கள் அதிகமாக உள்ளதால், இந்த விலை போதுமானதாக இல்லை.இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையில், தேயிலை தோட்டங்களில் களை செடிகள் அதிகமாகி தேயிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.இந்நிலையில், எதிர்வரும் நாட்களில், பசுந்தேயிலை மகசூல் அதிகரிக்க ஏதுவாக, தேயிலை தோட்டங்களில் விவசாயிகள் களை செடிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'தேயிலை தோட்டங்களில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் பணியால் தேயிலை பாதிக்கப்படாமல் இருக்கும். இதனால், மகசூல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது,' என்றனர்.
22-Oct-2024