லாரி டிரைவரிடம் லஞ்சம் -எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்
பந்தலுார்:லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே தேவாலா போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர், எஸ்.எஸ்.ஐ., ரங்கராஜ். இவர், ரோந்து வாகனத்தில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார். செப்., 7- இரவு, நாடுகாணி வழியாக கேரள மாநிலம், மலப்புரத்திற்கு காய்கறி கொண்டு செல்லும் லாரியை நிறுத்தி, டிரைவரிடம் லஞ்சம் வாங்கினார். இதை லாரியின் பின்னால் வந்த கார் டிரைவர் 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். எஸ்.பி., நிஷா விசாரணையில், எஸ்.எஸ்.ஐ., ரங்கராஜ் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.