மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர் மயக்கம்
10-Sep-2025
பந்தலுார்; பந்தலுார் அருகே உப்பட்டி மற்றும் எருமாடு பகுதிகளில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில், மகளிர் உரிமைத்தொகை கோரி அதிகளவிலான பெண்கள் விண்ணப்பம் அளித்தனர். பந்தலுார் அருகே எருமாடு, உப்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. எருமாட்டில் நடந்த நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம் வரவேற்றார். ஆர்.டி.ஓ., குணசேகரன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் ஷோனிஷாஜி நன்றி கூறினார். -இதேபோல, உப்பட்டியில் நடந்த முகாமில் கவுன்சிலர் ஆலன் வரவேற்றார். நகராட்சி தலைவர் சிவகாமி தலைமை வகித்தார். முகாமில் தாசில்தார் சிராஜுநிஷா, நகராட்சி கமிஷனர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்குவதற்காக அதிக அளவிலான பெண்கள் பங்கேற்றனர். வி.ஏ.ஓ. மாரிமுத்து நன்றி கூறினார்.
10-Sep-2025