மாநில விளையாட்டு போட்டி; சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
குன்னுார் ; மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் சாதித்த, குன்னுார் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.குன்னுார் ஸ்டேன்ஸ் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர், 28 பேர், ஈரோடு மாவட்டம் வ.உ.சி., பூங்கா, எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் கல்வித்துறை சார்பில் கடந்த, 6 முதல் 11ம் தேதி வரை நடந்த மாநில அளவிலான, 65வது குடியரசு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். அதில், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், 100 மீட்டர் ஓட்டத்தில் மாணவர் பிரடரிக் ஜோஸ் வென்றார். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பிரடரிக் ஜோஸ், பிரென்னி ஆன்டோ, சூரியதேவ், சகியூர் ரஹ்மான் ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். அதில், பிரெடரிக் ஜோஸ் தேசிய அளவிலான தொடர் ஓட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.மாவட்ட விளையாட்டு அதிகாரிகள், பள்ளி முதல்வர் கிளேன் குரோனிங், பள்ளி ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.