உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  வினோத நோயால் பாதிக்கப்பட்ட மாணவி :பள்ளி படிப்பை தொடர உதவி கிடைக்குமா?

 வினோத நோயால் பாதிக்கப்பட்ட மாணவி :பள்ளி படிப்பை தொடர உதவி கிடைக்குமா?

பந்தலுார்: ' வினோத நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி, படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பள்ளி மேலாண்மை குழு சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. எருமாடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஷீஜா கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு ; எருமாடு அரசு உயர்நிலைப் பள்ளியில், கையுன்னி காரக்கொல்லி பகுதியை சேர்ந்த கோபிகா, 9ம் வகுப்பு படித்து வருகிறார். 65 சதவீத உடல் இயக்க குறைபாடு கொண்ட இம்மாணவி, பிறர் துணையின்றி தினமும் பள்ளிக்கு வர முடியாத நிலையில் உள்ளார். இவரின் தாய்க்கும் இந்த நோய் உள்ளது. இவர்களை மாணவியின் தந்தை திருச்செல்வம் கவனித்து வருகிறார். மேலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த இம்மாணவியின் வீட்டிற்கு செல்லும் பாதையும் மிகவும் சேதமடைந்த நிலையில் வாகனங்கள் செல்வதில்லை. நடமாடுவதும் கூட மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, மாணவி பள்ளிப்படிப்பை தடையின்றி தொடர சாலையை சீரமைத்து தர வேண்டும். பள்ளிக்கு சென்று வர வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மாணவி கோபிகா கூறுகையில்,''சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளோம். தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். கேரளாவில் எங்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவ மனையில் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், போதிய நிதி வசதி இல்லாததால், எங்களால் அங்கு செல்ல முடியவில்லை. எனவே, இந்த வினோத நோயை குணப்படுத்த அரசு உதவ வேண்டும்,'' என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ