உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சீர் வரிசை வழங்கி, பூக்கள் துாவி மாணவர்களுக்கு வரவேற்பு; கிராமங்களில் மட்டுமே இத்தகைய காட்சிகள் சாத்தியம்

சீர் வரிசை வழங்கி, பூக்கள் துாவி மாணவர்களுக்கு வரவேற்பு; கிராமங்களில் மட்டுமே இத்தகைய காட்சிகள் சாத்தியம்

பந்தலுார்; கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் வரவேற்றார். நிர்வாகி கணபதி தலைமை வகித்தார். பி.டி.ஏ.,தலைவர் ரவீந்திரன், தலைவர் கீர்த்தனா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களுக்கு கிராம மக்கள் சார்பில் சீர்வரிசை தாம்பூல தட்டுகள் வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து, பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூக்கள் துாவி இனிப்புகள் வழங்கி மாணவர்களை வகுப்பறைகளில் அமர வைத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் முத்தம்மாள் பேசுகையில், ''இந்த பள்ளியின் வளர்ச்சியில் பெற்றோர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி முதல் படிப்பதற்கு தேவையான அனைத்து தளவாட பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் நிலையில், தரமான கல்வியும் போதிக்கப்படுகிறது. எனவே, தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலை சார்ந்து வாழும் இப்பகுதியில் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும்,'' என்றார். தொடர்ந்து முதல் வகுப்பில் சேர்க்கை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஊர் மக்கள் சார்பில், சுரேஷ், சின்னத்தம்பி, புண்ணியசீலன், கோபிநாத், பிரபா, சுப்பையா மற்றும் கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் அஷீதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ