உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ராணுவ முகாமில் துப்பாக்கி கண்காட்சி ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்கள்

ராணுவ முகாமில் துப்பாக்கி கண்காட்சி ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்கள்

குன்னூர்: மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், காலாட்படை தினத்தையொட்டி துப்பாக்கிகள் கண்காட்சி நடத்தி, கையாளும் முறை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டது. குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் முதன்மையான ராணுவ மையம். காலாட்படையினருக்கு பயிற்சி அளித்து எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதுடன், பல்வேறு போர்களில் பங்கேற்று, பலரும் உயிர் தியாகம் செய்துள்ளனர். நேற்று, 79வது காலாட்படை தினத்தையொட்டி , பேரக்ஸ் எம்.ஆர்.சி., நாகேஷ் சதுக்கத்தில், துப்பாக்கி கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் போரில் பயன்படுத்தும் பல்வேறு துப்பாக்கிகள் காட்சிப்படுத்தப்பட்டன. எல்.எம்.ஜி., கன், எம்.பி., 9 கன், ரைபிள், ராக்கெட் லான்ச்சர், மிஷின் கன் உட்பட பழைய மற்றும் நவீன துப்பாக்கிகள் கண்காட்சியில் இடம்பெற்றன. துப்பாக்கிகளை கையாள்வது மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து மாணவ, மாணவியருக்கு ராணுவ வீரர்கள் விளக்கம் அளித்தனர். வெலிங்டன் கேந்திரிய வித்யாலயா பள்ளி, கன்டோன்மென்ட் வாரிய பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று இதன் சிறப்பு குறித்து அறிந்து கொண் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி