உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடி பள்ளியின் ஊர் கூடி திருவிழா உண்டியல் பணத்தை கொடுத்த மாணவர்கள்

பழங்குடி பள்ளியின் ஊர் கூடி திருவிழா உண்டியல் பணத்தை கொடுத்த மாணவர்கள்

பந்தலுார்: பந்தலுார் பழங்குடியினர் பள்ளியில் நடக்கும் 'ஊர் கூடி திருவிழா' நிகழ்ச்சிக்கு, தனது உண்டியல் பணத்தை மாணவர்கள் வழங்கினர்.பந்தலுார் அருகே தேவாலா பகுதியில் செயல்படும், அரசு பழங்குடியினர் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் இணைந்து வரும், 20-ம் தேதி, கல்வி சீர் நிகழ்ச்சி, முன்னாள் மாணவர்கள் சங்கம், பள்ளி ஆண்டு விழா,' என, 'ஊர் கூடி திருவிழா' எனும் தலைப்பில் விழா நடத்துகின்றனர். இந்நிலையில், பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் யோஜித், அவரது சகோதரர் ேஹமந்த் ஆகியோர் உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை, பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியனிடம் வழங்கினர். மாணவர் யோஜித் கூறுகையில், ''எங்கள் பள்ளியில் நடைபெறும் ஊர் கூடி திருவிழாவில், எங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,1,729 ரூபாய் சேமிப்பு பணத்தை அளித்தேன்,'' என்றார். அந்த பணத்தை முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வாங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி