வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்ல முன்னேற்றம்
கூடலுார்: கூடலுார் காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள், அடிப்படை வசதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலுார் காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், 84 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கடந்த, 16ம் தேதி மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பிடத்தின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. பள்ளியின் மேற் கூரையும் பாதிக்கப்பட்டது. இதனை சீரமைத்து தர பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்த பெற்றோர், அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி, மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பாமல், பள்ளி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நியூேஹாப், எஸ்.ஐ., சிவக்குமார், வி.ஏ.ஓ., பார்வதி, பேரூராட்சி ஊழியர்கள் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரஞ்சினி மற்றும் பெற்றோர்கள், 'பள்ளியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்,' என்றனர். அதிகாரிகள் கூறுகையில்,'உயர் அதிகாரிகளிடம் பேசி, விரைவில் உரிய தீர்வு காணப்படும்,' என்றனர். அதனை ஏற்று, போராட்டம் கைவிடப்பட்டது.
நல்ல முன்னேற்றம்