மேலும் செய்திகள்
சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள்
10-Oct-2024
கோத்தகிரி; கோத்தகிரி சல்லிவன் நினைவு பூங்காவில், மலர் விதைகள் சேகரிப்பு பணி நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரான, ஜான் சல்லிவனின் நினைவிடம், கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் அருகே அவரது நினைவாக, சல்லிவன் நினைவு பூங்கா, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், கோத்தகிரி நேரு பூங்கா, கோடநாடு காட்சி முனை மற்றும் கேத்ரின் நீர்வீழ்ச்சியை கண்டு களிப்பதுடன், சல்லிவன் நினைவகத்தை பார்வையிட தவறுவதில்லை. சுற்றுலா பயணிகளுக்காக, நினைவகத்தின் அருகே, பூங்கா அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இது, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.இந்நிலையில், தற்போது, இரண்டாவது சீசன், நடந்துவரும் நிலையில், பூங்காவை மேலும் புனரமைத்து, பார்வையாளர்களை கவரும் வகையில் மலர்கள் பூத்துள்ளன. அதில், வாடி காயவைத்த மலர்களில் விதை சேகரிப்பு பணி நடந்து வருகிறது. இதன் மூலம் மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணி நடக்க உள்ளது.
10-Oct-2024