உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பயிற்சி; வன ஊழியர்கள் பங்கேற்பு

 நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பயிற்சி; வன ஊழியர்கள் பங்கேற்பு

கூடலுார்: கூடலுார் வனக்கோட்டத்தில் நடந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாமில், வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும், 2025-26ம் ஆண்டிற்கான, ஒருங்கிணைந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் இன்றும், நாளை என இரண்டு நாட்கள் நடக்கிறது. இப்பணியில் வன ஊழியர்களுடன் தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலுார், நீலகிரி, மசினகுடி வனக்கோட்டங்களில் நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது. இந்நிலையில், கூடலுார் வனக்கோட்டத்தில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம் நாடுகாணி தாவர மையத்தில் நேற்று நடந்தது. முகாமுக்கு, வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்து, நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பின் அவசியம், குறித்து விளக்கினார். நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியின் போது தென்படும் பறவைகளை குறித்த விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்வது குறித்து உயிரியியலர் கார்த்திகா விளக்கிறார். முகாமில், வனச்சரகர்கள் ரவி, சஞ்சீவ், வீரமணி, ரவி (நெலாகோட்டை), மேகலா, வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். வனத்துறையினர் கூறுகையில்,'நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் காலை, 6:00 மணி முதல் 10:00 மணி வரை நடக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி