உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

ஊட்டி: - ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு மற்றும் வாக்களிப்பு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், காலாண்டு மற்றும் அரையாண்டு உள்ளிட்ட, பல்வேறு கால இடைவெளிகளில் தொடர்ந்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை கலெக்டர் லட்சுமி பவ்யா அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இதில், தேர்தல் வட்டாட்சியர் காயத்ரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி