உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஜி.எஸ்.டி., 18 சதவீத வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மனு

ஜி.எஸ்.டி., 18 சதவீத வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மனு

ஊட்டி, ; தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நீலகிரி மாவட்ட தலைவர் முகமது பரூக் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மத்திய இணை அமைச்சர் முருகனிடம் அளித்துள்ள மனு:நீலகிரியில் அதிகளவில் உள்ளாட்சி அமைப்புகளின் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கான வாடகையானது, சந்தை மதிப்பீட்டின் படி, அதிகமாக உயர்த்தப்பட்டு தொடர்ந்து வணிகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாடகையை குறைக்க மாநில அரசிடம் போராடி வருகிறோம். அதில், மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரி, 18 சதவீதம் சேர்த்து, அதிக வாடகை தொகையை கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 'ஆன்லைன்' வர்த்தகத்தால் எங்களது வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வணிகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் நிலையை கருத்தில் கொண்டு, உள்ளாட்சி கடைகளின் வாடகைக்கான ஜி.எஸ்.டி., வரி, 18 சதவீதத்தை முற்றிலும் விலக்கு அளிக்க தாங்கள் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ