உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோரம் தற்காலிக கடைகள்; வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்

சாலையோரம் தற்காலிக கடைகள்; வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்

கோத்தகிரி; கோத்தகிரி-குன்னுார் இடையே, கட்டபெட்டு 'இன்கோ' சந்திப்பில், மீண்டும் கடைகள் ஆக்கிரமித்து உள்ளதால், வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல் அதிகரித்துள்ளது. சமவெளி பகுதியில் இருந்து, ஊட்டிக்கு செல்லும் பெரும்பாலான சுற்றுலா வாகனங்கள், கோத்தகிரி - கட்டபெட்டு வழியாக சென்று வருகின்றன. வார இறுதி விடுமுறை நாட்களில், சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால், கட்டபெட்டு பஜார் பகுதியில், போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. இப்பகுதி, மூன்று ஊராட்சிகளின் எல்லையாக அமைந்துள்ளதால், மக்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், குன்னுார் அருவங்காடு பகுதியில் மாதத்தின் முதல்வாரம், 8ம் தேதி வியாபாரத்தை முடித்துவிட்டு, கட்டபெட்டு சாலையோரங்களில் 'பார்க்கிங்' பகுதியில் கடை போடுவதால், தனியார் வாகனங்களை நிறுத்த முடியாமல் சாலையில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் இப்பகுதியில் கடைகளை வைப்பதை தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி