உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மண் சரிந்து இறந்த இளைஞர் உடல் ஜார்க்கண்ட் சென்றது

மண் சரிந்து இறந்த இளைஞர் உடல் ஜார்க்கண்ட் சென்றது

ஊட்டி:ஊட்டியில் மண்சரிவு ஏற்பட்டு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஜார்க்கண்ட் மாநில வாலிபரின் உடலை, அரசு சார்பில் ஊருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஊட்டி பாபுஷா லைன் பகுதியில் கட்டுமான பணியின் போது, எதிர்பாராத விதமாக மண் சரிந்து,இடிபாடுகளில் சிக்கிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான்,20, உயிரிழந்தார். அவருக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, 2 லட்சம் ரூபாய் வழங்கவும், சிகிச்சை பெற்று வரும் ஜாகீர்,22, என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.மேலும், இறந்தவரின் உடலை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு கொண்டு செல்ல, அரசு சார்பில் ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.தொடர்ந்து, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் வாலிபரை நேரில் சந்தித்த கலெக்டர் அருணா கூறுகையில், ''விபத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரின் உடலை அரசு சார்பில், சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞருக்கு, முதல்வரின் உத்தரவுப்படி, 50 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது,'' என்றார்.இதில், மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, தாசில்தார் சரவணகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி