இறந்த பசு அருகே காத்திருந்த கன்று
குன்னுார்: குன்னுார் டி.டி.கே., சாலையில், இறந்து கிடந்த பசு அருகே கன்று குட்டி அமர்ந்து இருந்தது சோகத்தை ஆழ்த்தியது. குன்னுார் டி.டி.கே., சாலையோரத்தில் நேற்று முன்தினம் பசு ஒன்று இறந்தது. நேற்று காலையில், இதன் அருகில் கன்று குட்டி அமர்ந்து, சோகத்தில் இருந்தது. இது அவ்வழியாக வந்தவர்களையும் கண் கலங்க செய்தது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் தெரிவித்து, பசுவின் உடலை ஒப்படைத்து, புதைக்க வருவாய்துறையினர், தன்னார்வலர்கள் ஏற்பாடுகள் செய்தனர்.