உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகரில் பாதிக்கப்பட்டுள்ள சுகாதாரம்; கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்

நகரில் பாதிக்கப்பட்டுள்ள சுகாதாரம்; கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்

பந்தலுார் ; பந்தலுார் பஜாரில் சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் இது குறித்து கண்டு கொள்ளாமல் இருப்பது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மூன்ற மாநில வாகனங்கள் அதிகளவில் வந்து செல்லும், பந்தலுார் பஜாரில் கழிவு நீர் வழிந்தோட போதிய கால்வாய் வசதி இல்லாமல் உள்ளது. இதனால், கடைகள், ஓட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மொத்தமாக தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பந்தலுார் பஜாரின் மையப்பகுதியில் உள்ள மீன்கடை அருகே, கழிவுகள் வழிந்து ஓட வழி இல்லாமல், தேங்கி நிற்பதால் கொசுக்கள் மற்றும் புழுக்களின் உற்பத்தி நிலையமாக மாறி உள்ளது. இதே பகுதியில், ஓட்டல் ஒன்றின் பின்பகுதியில் கழிவுகள் தேங்கி நின்று புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, நோய் தொற்று ஏற்பட வழி ஏற்பட்டுள்ளது.வியாபாரிகள் கூறுகையில்,' ஓட்டல்கள், கடைகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல, நகராட்சி நிர்வாகம் போதிய கால்வாய் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். கால்வாய் வசதி இல்லாததால் கழிவுகள் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது,' என்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம், பல்வேறு தரப்பினரும் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, பஜார் பகுதியில் கழிவு வழிந்தோட, போதிய கால்வாய் வசதி ஏற்படுத்தி, சுகாதாரத்தை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை