மேலும் செய்திகள்
பவானியாற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
30-Aug-2025
பந்தலுார்; பந்தலுாரில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. பந்தலுார் மற்றும் தேவாலா சுற்று வட்டார பகுதிகளில் வைக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மதியம் பந்தலுார், ரிச் மவுண்ட் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் சிலை ஊர்வலம் துவங்கியது. வி.எச்.பி., நிர்வாகி ரமேஷ் தலைமை வகித்தார். பா.ஜ., நெல்லியாளம் நகர தலைவர் ரெங்கநாதன், கூடலுார் சட்டசபை பொறுப்பாளர் தீபக்ராம் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, ஊர்வலம் பந்தலுார், மேங்கோரேஞ்ச், தொண்டியாளம், உப்பட்டி வழியாக பொன்னானி விஷ்ணு கோவில் அருகே ஆற்றங்கரையில், 37 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. கோத்தகிரியில், பிரம்மாண்டமான விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. டானிங்டன் பகுதியில் துவங்கிய ஊர்வலத்திற்கு, இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் செந்தில்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம், ராம்சந்த் வழியாக, உயிலட்டி நீர்வீழ்ச்சியில் விசர்ஜனம் செய்யப்பட்டது. பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன், வர்த்தக அணி மாநில தலைவர் அம்பிகை கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்திராமு உட்பட பலர் பங்கேற்றனர். முதுமலை மசினகுடியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஆறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜித்து வந்தனர். பூஜிக்கப்பட்ட சிலைகள், மசினகுடி விநாயகர் கோவிலுக்கு, எடுத்துவரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்துக்கு இந்து முன்னணி, மாவட்ட துணை தலைவர் சைஜூஸ் தலைமை வகித்தார். மசினகுடி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட சிலைகள் மரவக்கண்டி அணையில் விசர்ஜனம் செய்தனர். நடுவட்டம் பகுதியில் பொதுமக்கள் சார்பில், 10 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜித்து வந்தனர். பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நடுவட்டம் பகுதிக்கு எடுத்துவரப்பட்டது. அங்கிருந்த சிலைகள், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று, டி.ஆர்., பஜார் அணையில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
30-Aug-2025