உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மீண்டும் வந்தான் கட்டை கொம்பன்; ஆக்ரோஷமாக காணப்படுவதால் அச்சம்

மீண்டும் வந்தான் கட்டை கொம்பன்; ஆக்ரோஷமாக காணப்படுவதால் அச்சம்

பந்தலுார்; பந்தலுார் அருகே அய்யன்கொல்லி குடியிருப்பு பகுதிக்கு மீண்டும் கட்டை கொம்பன் யானை வந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் யானை அடிக்கடி உலா வருகிறது. சமீபகாலமாக இந்த யானையை காணவில்லை. யானை வேறு வனப்பகுதிக்கு சென்றிக்க வாய்ப்புள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.அவ்வப்போது, இரவில் வனத்துறையினர் மட்டும் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை அய்யன்கொல்லி அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் கட்டை கொம்பன் நின்றிருந்தது. உடல் முழுவதும் மண்ணுடன் ஆக்ரோஷமாக காணப்பட்ட, இந்த யானை சுகாதார நிலையம் மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய புதர் பகுதியில் நடமாடி வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். பிதர்காடு மற்றும் சேரம்பாடி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வனத்துறையினர் கூறுகையில்,'கட்டை கொம்பன் யானை மீண்டும் உலா வருவதால், இரவில் முன்னெச்சரிக்கையுடன் நடமாட வேண்டும்,' என, அறிவுறுத்தினர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி