மேலும் செய்திகள்
யானை வழித்தட பாதையில் கண்காணிப்பு கோபுரம்
18-Apr-2025
+- பந்தலுார் : பந்தலுார் பகுதியில் காயத்துடன், உலா வரும் கட்டை கொம்பன் யானையை வனக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக, 'கட்டை கொம்பன்' என்று அழைக்கப்படும் ஆண் யானை ஒன்று தனியாக உலா வருகிறது. இதனோடு இணைந்து சுற்றிய புல்லட் என்ற ஆண் யானை, பிடிக்கப்பட்ட நிலையில் தனியாக சுற்றி வரும் இந்த யானை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொளப்பள்ளி டான்டீ ஆனைப்பள்ளம் என்ற இடத்தில், டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்பு கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. முன் கால் அடிபட்ட நிலையில் தானாகவே எழுந்து, அருகில் உள்ள புதருக்குள் சென்றுள்ளது. இதுகுறித்து தொழிலாளர்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வனச்சரகர் அய்யனார் தலைமையிலான வனக்குழுவினர், யானையின் உடல் நலம் குறித்து கண்காணித்த போது, அதன் தும்பிக் கையில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது, உணவு மற்றும் தண்ணீரை சாதாரணமாக உட்கொண்டு வரும் நிலையில், தனியாக ஒரு வனக் குழுவை நியமித்து, கட்டை கொம்பனின் உடல் நலம் மற்றும் நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொது மக்கள் கூறுகையில், 'கால்நடை டாக்டர் உதவியுடன் இதன் உடல் நலம் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதற்கு படு காயம் இருக்கவும் வாய்ப்புள்ளது,' என்றனர்.
18-Apr-2025