உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மண்டபத்தை சுற்றி வந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை

மண்டபத்தை சுற்றி வந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை

குன்னூர்; குன்னுார் எடப்பள்ளி இந்திரா நகரில், திருமண மண்டபத்தை சுற்றி வந்த சிறுத்தை நாயை கவ்வி சென்றது.குன்னுார் வட்டம் சுற்றுப்புற பகுதிகளில் சிறுத்தைகள் நாய் மற்றும் கால்நடைகளை வேட்டையாட குடியிருப்புபகுதிகளுக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில், எடப்பள்ளி இந்திரா நகர் அருகே சிறுத்தை ஒன்று வந்துள்ளது.அதே சமயம், திருமண மண்டபத்தின் வெளியே, கர்நாடகாவில் இருந்து திருவிழாவிற்காக வந்திருந்த, நடன குழுவினர், 12 பேர் தங்கி இருந்தனர். இந்த சிறுத்தை அந்த மண்டபத்தை, 3 முறை சுற்றி வந்து நாய்களை விரட்டியது. தொடர்ந்து பள்ளி அருகில் இருந்த, ஒரு நாயை வேட்டையாடி சென்றது. சிறுத்தையை பார்த்த நடன குழுவினர்,அதிர்ச்சி அடைந்தனர்.மக்கள் கூறுகையில், 'இங்கு வந்து செல்லும் சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விட, கடந்த, 4 கிராம சபை கூட்டங்களில் வனத் துறையிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை