இருக்கைகள் அமைக்க மறந்த நகராட்சி; நீண்ட நேரம் நிற்கும் பயணிகள்
குன்னுார், ; குன்னுார் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் ஆற்றோர பகுதியில் தடுப்புகளுடன் இருக்கை அமைக்கும் பணி முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நகராட்சி சார்பில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதே போல, பஸ் ஸ்டாண்டின் எதிர்புறம், ஐகோர்ட் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட இடத்தில், நகராட்சி சார்பில் தடுப்பு அமைத்து, இருக்கை அமைக்கும் பணி கடந்த நவ., மாதத்தில் துவக்கப்பட்டது. தொடர்ந்து, பாதியளவில் பணிகள் முடிக்கப்பட்டு, முழுமை பெறாமல் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே புகார் அளித்தும், தீர்வு காணப்படவில்லை. நெரிசல் நேரங்களில், பலரும் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்து நிற்கின்றனர்.மக்கள் கூறுகையில், ' பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள நகராட்சி பணிகளை முழுமையாக மேற்கொண்டு பயணிகள் அமர இருக்கைகள் அமைக்க வேண்டும்,' என்றனர்.