மேலும் செய்திகள்
வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் 'கட்'
30-Apr-2025
குன்னுார்,; குன்னுார் அம்பிகாபுரத்தில், சாலையோரம் அகற்றப்படாத குப்பையால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.குன்னுார் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட, அம்பிகாபுரம் பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள சாலையோரத்தில், ஊராட்சி சார்பில் இரு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இவை துரு பிடித்து, சேதமான நிலையில் உள்ளதால், குப்பைகளை மக்கள் வெளியே கொட்டுகின்றனர். கொசுக்கள், ஈக்கள் அதிரித்துள்ளது. இவற்றை முறையாக அகற்றாததால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழல் பாதிக்கிறது. இதுகுறித்து ஊராட்சி நிரிவாகத்திடம் மக்கள் பல முறை தெரிவித்தும், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். எனவே, இப்பகுதியில் புதிய குப்பை தொட்டிகள் வைக்கவும், குப்பைகளை தினமும் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30-Apr-2025