உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் பணி

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் பணி

கூடலுார்: கூடலுார் ஸ்ரீமதுரை, வடவயல் பகுதியில், மூன்று ஏக்கர் அரசு நிலம் எட்டு நபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்பகுதியை அரசின் தேவைக்காக, மீட்கும் நடவடிக்கையில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் முதல் கட்ட நடவடிக்கையாக வருவாய் ஆய்வாளர் ரேகா மற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் 'நோட்டீஸ்' ஒட்டியுள்ளனர்.வருவாய் துறையினர் கூறுகையில், 'அப்பகுதியில் அரசு நிலத்தை, மீட்கும் முதல் கட்ட நடவடிக்கையாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை