உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் முப்பெரும் விழா

செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் முப்பெரும் விழா

ஊட்டி: - ஊட்டி செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் ஆசிரியர் தின விழா, அன்னை தெரேசா மற்றும் புனித கார்ல் ஆக்டிவிஸ் திருவிழா என, முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. ஆலய குழுவினர்களான ஆல்ட்ரின், அனிதா தலைமையில், இசை முழங்க ஆயருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், பங்கு ஆசிரியர்கள் மற்றும் செயின்ட் பயஸ் குரு மடத்தின் மாணவர்கள் புனிதர்களின் சுரூபங்களை தாங்கி, பவனியாக ஆலயத்தை நோக்கி வந்தனர். பங்கு குரு மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து அந்த சுரூபத்தை நிறுவினர். தொடர்ந்து, குழந்தைகளுடன் ஏசு வீற்றிருக்கும் சுரூபத்தை திறந்து வைத்து புனிதப்படுத்திய ஆயர், ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி கவுரவித்தார். தொடர்ந்து, மறை மாவட்ட ஆன்மிக குரு ஞானதாஸ், குரு மட அதிபர் ஜெயக்குமார் மற்றும் பங்கு குருக்களின் நன்றி திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில், ஆயரின் செயலர் இம்மானுவேல் ஆண்டனி, இத்தாலியில் இருந்து வந்திருந்த குரு தேவராஜ் உட்பட பங்கு ஆசிரியர்கள் மற்றும் பங்கு மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, பங்கு குரு பெனடிக்ட், உதவி பங்கு குரு பிரின்ஸ் மற்றும் இளைஞர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி