உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முகாமில் வருவாய் துறை சம்பந்தப்பட்ட மனுக்கள் அதிகம்

முகாமில் வருவாய் துறை சம்பந்தப்பட்ட மனுக்கள் அதிகம்

கோத்தகிரி; கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடந்து வரும் முகாமில், அதிகபட்சமாக வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கோத்தகிரி பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்து வருகிறது. அதில், 13 சேவைகள் மூலம், 45 துறை சார்பில், பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, 45 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளுக்கு, மூன்றாவது கட்டமாக முகாம் நடந்தது. அதில், மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட தேவைகளுக்கு மக்கள் மனு அளித்தனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில், பட்டா மாறுதல், சிட்டா சேர்த்தல் உள்ளிட்ட, வருவாய் துறை சம்பந்தப்பட்ட, தேவைகளுக்காக இதுவரை, 600 மனுக்கள் பெறப்பட்டதாக, அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை