சாலையில் தடுப்புச்சுவர் இல்லை; தாழ்வான பகுதி மக்கள் பாதிப்பு
பந்தலுார்; பந்தலுார் அருகே சோலாடி பகுதியில், சாலை ஓரம் நடைபாதை இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சோலாடி பகுதி அமைந்துள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு செல்ல, ஊராட்சி மூலம் சிமென்ட் சாலை அமைத்து தரப்பட்டது. ஆனால், வளைவான பகுதியில் சாலை ஓரம் தடுப்புச்சுவர் அமைக்காமல் சாலை அமைத்ததால், இருசக்கர வாகனங்களில் வேகமாக வருபவர்கள் நிலைத்தடுமாறி விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், சிறு குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மழை காலங்களில் வலிக்கு கால் இடறி விழுந்து பாதிக்கின்றனர்.இந்த வழியாக அவ்வப்போது யானைகள் வந்து செல்லும் நிலையில், இரவில் யானைகள் சாலை ஓரத்தில் காலை வைத்தால் தடுமாறி வீடுகள் மீது, விழும் நிலையே உள்ளது.தடுப்பு சுவர் அமைத்து தர இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகவலியுறுத்தியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. எனவே, பாதிப்புகளை தவிர்க்க சாலை ஓரத்தில் தடுப்புச்சுவர் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.