தேயிலையில் கொப்புள நோயின் தாக்கம் குறைந்தும் மகசூல் இல்லை
கோத்தகிரி; தேயிலை தோட்டங்களில் கொப்புள நோயின் தாக்கம் குறைந்தும், மகசூல் குறைவால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. கடந்த சில நாட்களாக, அவ்வப்போது காற்றுடன், மேகமூட்டமான காலநிலை நிலவி வருகிறது.பெரும்பாலான தோட்டங்களில், கொப்புள நோயின் தாக்கம், இருந்து வருகிறது. இந்நிலையில், ஒரு வாரத்திற்கும் மேலாக வெயிலுடன், காற்று வீசி வருகிறது.இதனால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. நோய் தாக்கிய இலைகள் காற்றில் உதிர்ந்து வருவதுடன், செடிகளில் பசுந்தேயிலை துளிர் விட துவங்கியுள்ளது.தோட்டங்களில் ஈரப்பதம் குறைந்துள்ளால், மழை பெய்தால் மட்டுமே, மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 20 ரூபாய்க்கு குறையாமல் விலை கிடைப்பது, விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலாக உள்ளது. இனிவரும் இரண்டு மாதங்களில் வறட்சி அதிகரிக்கும் என்பதால், மகசூல் குறைய வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.