திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு; முதல் நிலை தேர்வில் ஒன்பது பேர்
ஊட்டி,; திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை ஒட்டி ஊட்டியில் முதல் நிலை தேர்வு நடந்தது. தமிழ் வளர்ச்சி துறை சார்பில் குமரி முனையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை ஒட்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வினாடி, வினா போட்டி நடத்தப்படுகிறது.இப்போட்டி விருதுநகர் மாவட்டத்தில் இம்மாதம், 28ம் தேதி மாநில அளவிலான போட்டி நடக்கிறது. அதில், நீலகிரி மாவட்டம் சார்பில் பங்கேற்பதற்காக மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வழிகாட்டுதலின்படி, மாவட்ட அளவில், 9 பேர் கொண்ட 3 குழுக்களை தேர்வு செய்வதற்கான முதல் நிலை தேர்வுகள் ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில் நடந்தது.அதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான அரசுத்துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இத்தேர்வினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் மற்றும் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை அலுவலர்கள் பார்வையிட்டனர்.திருமலை -(ஊட்டி சார் நிலை கருவூலம்), மைதிலி -(ஊட்டி தோட்டக்கலை இணை இயக்குனர் அலுவலகம்), சுஜாதா -(அரசு உயர்நிலைப்பள்ளி மிளித்தேன்), சகுந்தலா -(அரசு மேல்நிலைப்பள்ளி எடப்பள்ளி), அன்பழகன் -(அரசு உயர்நிலைப்பள்ளி கொட்டமேடு), ஜெசினா பானு -(ஊட்டி முதன்மை கல்வி அலுவலகம்), கமல் -(கோத்தகிரி தாசில்தார் அலுவலகம்), காயத்ரி - (அரசு உயர்நிலைப்பள்ளி கூக்கல்தொரை), ராஜு பெட்டன் -(என்.எஸ்., அய்யா நினைவு மேல்நிலை பள்ளி காட்டேரி) ஆகிய, 9 அரசு ஊழியர்கள் தேர்வாகி உள்ளனர்.