உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 25 ஆயிரம் சோலை மர நாற்றுகள் தேவைப்படுவோர் அணுகலாம்

25 ஆயிரம் சோலை மர நாற்றுகள் தேவைப்படுவோர் அணுகலாம்

ஊட்டி; 'ஊட்டி வடக்கு வனச்சரகத்தில், 25 ஆயிரம் சோலை மர நாற்றுகள் வினியோகிக்கப்படுவதால் தேவைப்படுபவர்கள் அணுகலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், 65 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. வனத்தில் காணப்படும் அன்னிய மரங்கள் ஒருபுறம் அகற்றப்பட்டு வருகிறது. சுற்று சூழலை பாதுகாப்பு நோக்கில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் இலவசமாக சோலை மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நீலகிரி வனக்கோட்டம் ஊட்டி வடக்கு வன சரகம் சார்பில் விவசாயிகளுக்கு நேரடியாக பலன் தரும் மரக்கன்றுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், ஊட்டி வடக்கு வனசரகத்தில், 25 ஆயிரம் சில்வர் ஒர்க் நாற்றுகள், சோலை மர நாற்றுகளான நாவல், விக்கி, கோலி, கிலிஞ்சி, செண்பகம்,மேப்பியா உள்ளிட்ட, 5,000 மர நாற்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படுபவர்கள் ஆதார் கார்டு, பட்டா சிட்டா நகலுடன் ஊட்டி வடக்கு வனசரக அலுவலகத்தை அணுகி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ