உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானையிடம் உயிர் தப்பியவர்கள் மருத்துவமனையில் அனுமதி

யானையிடம் உயிர் தப்பியவர்கள் மருத்துவமனையில் அனுமதி

பந்தலுார்; பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பகுதியில், யானையிடம் சிக்கி உயிர் தப்பியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கேரளா மாநிலம் கண்ணனுார் பகுதியை சேர்ந்த மூன்று பேர், நேற்று முன்தினம் காரில் ஊட்டிக்கு சென்று விட்டு இரவு, 11:00 மணிக்கு, கூடலுார் நெலாக்கோட்டை வழியாக கேரளாவுக்கு திரும்பி சென்றுள்ளனர்.அப்போது, நெலாக்கோட்டை, 9-வது மைல் பகுதியில் கார் வந்த போது, காரின் முன் வந்த இரண்டு யானைகள் காரை தாக்கி உள்ளன. மேலும், காரை தந்தங்களால் குத்தியதுடன், பின்பக்க கதவின் கண்ணாடியை தாக்கி உடைந்துள்ளன. அதில், காரின் பின்பகுதியில் அமர்ந்திருந்த ரிஷ்வானா,21, ஷெகதியா,22, ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ரிஸ்வானா மயக்கம் அடைந்தார்.அப்பகுதியில் இருந்த வனத்துறையினர், டிரைவர் ரகதார்ராய் உட்பட மூவரையும் காப்பாற்றி, கேரளா மாநில மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது தலைச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெலாக்கோட்டை வனச்சரகர் ரவி விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ