மேலும் செய்திகள்
சைபர் மோசடி: கோவாவில் 507 இணையதளம் முடக்கம்
30-Nov-2025
பந்தலுார்: மதுரையில் பண மோசடியில் ஈடுபட்ட, நீலகிரியை சேர்ந்த மூவரை சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். 'மதுரையில் சிலர், பெண்களை வைத்து ஆசை வார்த்தைகள் கூறி, பண மோசடியில் ஈடுபட்டடனர்,' என, மதுரை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்தது. விசாரணை மேற்கொண்ட போலீசார், பந்தலுார் அருகே பாக்கனா புத்துார் வயல் பகுதியை சேர்ந்த, ரியாஸ், 25, கூடலுார் செம்பாலா பகுதியை சேர்ந்த, சுதீர்,36, அசீனா,30, ஆகியோர், 60 லட்சம் ரூபாய் மோசடியில், ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதனை அடுத்து, நேற்று முன்தினம் கூடலுார் மற்றும் புத்துார் வயல் பகுதிக்கு வந்த மதுரை, சைபர் கிரைம் போலீசார் மூவரையும், கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
30-Nov-2025