உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடன் வசூலிக்க சென்றபோது கைகலப்பு: மூவர் கைது; ஐந்து பேர் மீது வழக்கு பதிவு; மிரட்டிய காவலர் ஆயுத படைக்கு மாற்றம்

கடன் வசூலிக்க சென்றபோது கைகலப்பு: மூவர் கைது; ஐந்து பேர் மீது வழக்கு பதிவு; மிரட்டிய காவலர் ஆயுத படைக்கு மாற்றம்

குன்னுார்; குன்னுார் எம்.ஜி.ஆர்., நகரில், கடன் வசூலிக்க சென்ற போது, ஏற்பட்ட கைகலப்பில் இருவர் காயமடைந்தனர். தனியார் பைனான்ஸ் ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குன்னூர் தனியார் பைனான்ஸ் நிறுவனம் சார்பில், எம்.ஜி.ஆர்., நகரில் கவுசல்யா என்பவருக்கு வழங்கப்பட்ட மகளிர் கடன் வசூலிக்க, நேற்று முன்தினம் ஊழியர்கள் பிரவீன்,27,கோபி கிருஷ்ணன்,30, ஆகியோர் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த குமார் என்பவருக்கும், இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இரு தரப்பினருக் கும் ஏற்பட்ட கைகலப்பில், பிரவீன் என்பவர், குமாரை ஹெல்மட்டில் தாக்கியுள்ளார். இதனால், ஊர் மக்கள் திரண்டதில் பிரவீனும் தாக்கப்பட்டார். இருவரும் குன்னுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். குமார் அளித்த புகாரின்பேரில், கோபி கிருஷ்ணன், 30, தமிழ்செல்வன், 24, ரவிச்சந்திரன், 24, ஆகியோர் கைது செய்யப்பட்டு, கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். தனியார் பைனான்ஸ் ஊழியர்கள் சார்பில், கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், நகராட்சி துாய்மை பணியாளர்கள் குமார், ரம்யா, கவுசல்யா, ஐயப்பன், ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, அங்கு விசாரிக்க சென்ற காவலர் கிருபாகரன், அங்கிருந்த பொதுமக்களிடம் மரியாதை குறைவாக பேசி, மிரட்டியுள்ளார். இது தொடர்பாக, நீலகிரி எஸ்.பி.,க்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கிருபாகரன் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி