உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதைப்பொருளுடன் மூவர் கைது

போதைப்பொருளுடன் மூவர் கைது

பாலக்காடு: போதைப்பொருளுடன் தம்பதியர் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். பாலக்காடு மாவட்டம், கல்லடிக்கோடு அருகே கரிம்பா முட்டிக்கல்கண்டம் பகுதியில், நேற்று (நவ.,14) மாலை கல்லடிக்கோடு போலீசாரும், போதை தடுப்பு பிரிவினரும் இணைந்து வாகன சோதனையை நடத்தி வந்தனர். பாலக்காட்டிலிருந்து மண்ணார்க்காடு நோக்கிச் சென்ற பஸ்சை, தடுத்து நிறுத்தி பயணிகளிடம் நடத்திய சோதனையிட்டனர். அப்போது செர்புளச்சேரி காராட்டுகுர்சியைச் சேர்ந்த முகமது சினான், 27, ஷைஜு, 37 மற்றும் அவரது மனைவி பிரியா, 33, ஆகியோரின் பையில் ரூ.3.20 லட்சம் விலைமதிப்புள்ள, 80 கிராம் எடை கொண் எம்.டி.எம்.ஏ., என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பதைக்கண்டுபிடித்தனர். இதையடுத்து கைது செய்த அவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை