உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூங்கா பேட்டரி காரில் பயணிக்க ரூ. 30 கட்டணம் நிர்ணயம் டிக்கெட் வழங்கும் பணி அமல்

பூங்கா பேட்டரி காரில் பயணிக்க ரூ. 30 கட்டணம் நிர்ணயம் டிக்கெட் வழங்கும் பணி அமல்

ஊட்டி, ; ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேட்டரி காரில் பயணிக்கும் ஒரு சுற்றுலா பயணிக்கு, 30 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதத்தில் மலர் கண்காட்சி; செப்., மாதத்தில் இரண்டாவது சீசனும் நடக்கிறது. சீசன் சமயங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தவிர, பிற நாட்களிலும் கணிசமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை, இத்தாலியன் கார்டன், 'செல்பி ஸ்பாட்' உள்ளிட்ட பகுதிகளை சற்று துாரம் நடந்து சென்று பார்க்க வேண்டி உள்ளது. இங்கு வரும் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று பூங்கா நிர்வாகம், கடந்த ஆண்டு சீசன் நேரங்களில் மட்டும் பேட்டரி காரை இயக்கியது. 'சீசன் சமயத்தில் மட்டும் இயக்கப்பட்ட பேட்டரி காரை பிற நாட்களிலும் இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. இதை அடுத்து பேட்டரி கார் மீண்டும் இயக்கப்பட்டது. தற்போது இயக்கப்படும் ஒரு பேட்டரி காரில், 8 பேர் பயணிக்கலாம். இந்நிலையில், சில நாட்களாக இந்த காரில் டிக்கெட் கொடுக்காமல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் புகார் எழுந்தது. இதனை தவிர்க்க, நேற்று முதல் பேட்டரி காரில் பயணிக்கும் ஒரு சுற்றுலா பயணிக்கு, 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்காக ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. 'அங்கு வைக்கப்பட்ட போர்டிலும் கட்டண விபரத்தை எழுத வேண்டும்,' என, சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை