மேலும் செய்திகள்
நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் குடிநீர் வசதி இல்லை
20-Apr-2025
கூடலுார்; கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் புலி, மானை வேட்டையாடி இழுத்து சென்ற காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு வியந்தனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி, கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு காலை நேரத்தில் வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி புலிகளை பார்த்து ரசித்து வருகின்றனர்.இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு, சுற்றுலா பயணிகள், வனத்துறை வாகனத்தில் சவாரி சென்று கொண்டிருந்தனர். அப்போது புலி ஒன்று மானை வேட்டையாடி, இழுத்து சென்ற காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து வியந்தனர். பயணிகள் கூறுகையில், 'வனப்பகுதியில் புலிகள் எளிதில் தென்படுவதில்லை. இந்நிலையில், புலி, மானை வேட்டையாடி இழுத்து சென்ற காட்சியை அதிர்ஷ்டவசமாக பார்க்க முடிந்தது. இக்காட்சி வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகவும் அமைந்தது,' என்றனர்.
20-Apr-2025