உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சண்டையில் காயமடைந்த புலிக்கு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை

சண்டையில் காயமடைந்த புலிக்கு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை

கூடலூர்; புலிகளுக்குள் ஏற்பட்ட சண்டையில், காயமடைந்த ஆண் புலிக்கு மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி, கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்குள்ள குண்டுகெரே வனத்தை ஒட்டியுள்ள சாலையோரத்தில், நேற்று முன்தினம், காயத்துடன் புலி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. உதவி வனப் பாதுகாவலர் சுரேஷ், குண்டுகெரே வனச்சரகர் நாயக் ஆகியோர் புலியை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கால்நடை டாக்டர் வாசிம் மிர்சா மயக்க மருந்து செலுத்தி புலியை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தார். காயமடைந்த புலியை மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்துக்கு எடுத்த செல்ல வனத்துறையினர் முற்பட்ட போது, அங்கு வந்த பொதுமக்கள் புலியோடு சண்டையிட்ட மற்றொரு புலியை பிடிக்க வேண்டும். காயமடைந்த புலியை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது' என, புலியை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தனர். புலியை பிடிக்க நட வடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். மற்றொரு புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'காயமடைந்த ஆண் புலிக்கு, 11 வயது இருக்கும். மற்றொரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் புலிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மைசூரு கூர்கல்லில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை