உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அழகு சாதன பொருட்களில் அதிக ரசாயனம் சேர்ப்பு; பள்ளி மாணவியருக்கு அட்வைஸ்

அழகு சாதன பொருட்களில் அதிக ரசாயனம் சேர்ப்பு; பள்ளி மாணவியருக்கு அட்வைஸ்

குன்னுார்: குன்னுார் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை மார்க்கெட் அமலா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை சிசில் மேரி, முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் எலிசபெத் வரவேற்றார். குன்னுார், குடிமக்கள் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் பேசுகையில், ''நுகர்வு கலாசாரம் பல்வேறு சிக்கல்களை தருகிறது. கடன், வரதட்சணை, லஞ்சம் சமுதாய ஏற்ற தாழ்வுகள் சமூக தீமை என பலவற்றிலும், மக்கள் நிம்மதியை இழந்து வருகின்றனர். அழகி போட்டிகள் அதிகரித்து வருவதால், வீடு தோறும், பியூட்டி பார்லர்களாக மாறி வருகிறது. தெருவுக்கு ஒரு அழகு கூட நிலையம் உள்ளது. சந்தையில், 8,000க்கும் அதிகமான அழகு சாதன பொருட்கள் கிடைக்கின்றன. இதில், அழகு மற்றும் நறுமணத்திற்காக, 12,500 ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. நச்சு பூச்சுகளில் உள்ள, 65 சதவீத காரீயம், குழந்தைகளின் மூளை திறனை பாதிக்கிறது. 22 சதவீதம் அழகூட்டும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் உள்ளதாக 'ஸ்கின் டீப்' அமைப்பு எச்சரிக்கிறது. எனவே, பள்ளிகளில் படிக்கும் இளவயது பெண் குழந்தைகள், அழகு சாதன விளம்பரங்களில் ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும்,'' என்றார். நுகர்வோர் பாதுகாப்பு சட்ட சிறப்புகள் குறித்து செயலாளர் ஆல்தொரை, மின்சார சிக்கனம் குறித்து அமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் பேசினர். நிகழ்ச்சியை லட்சுமி நாராயணன் தொகுத்து வழங்கினார். 'விழிப்புடன் இருப்போம்,' என, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் மரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை