மரத்தில் மெகா சிலந்தி வலை; சுற்றுலா பயணிகள் வியப்பு
கூடலுார், ; கூடலுாரில் வனப்பகுதியில் மரத்தில் வெண்மையாக காணப்பட்ட மெகா சிலந்தி வலையை சுற்றுலா பயணிகள் கண்டு வியந்தனர். கூடலுார் இரும்புபாலம் அருகே, கோழிக்கோடு சாலையோரம், ஒரு மரம் முழுவதும் உள்ள சிலந்தி வலையின் மீது காலை நேரத்தில் பனித்துளிகள் படர்ந்து, வெயிலின் போது, வெண்மையாக காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு வியந்தனர். சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'காலை நேரத்தில் இப்பகுதியை கடந்து செல்லும்போது பசுமை மரங்களுக்கு இடையே, ஒரு மரத்தின் மீது காணப்பட்ட மெகா சிலந்தி வலை வியப்பாக உள்ளது. இதுவரை இது போன்ற சிலந்தி வலையை காணவில்லை,' என்றனர்.