உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்

மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்

குன்னுார்; சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால், மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.குன்னுார்-- ஊட்டி இடையே நாள்தோறும் தலா நான்கு முறையும், மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே, தலா ஒரு முறையும் மலை ரயில் இயக்கப்படுகிறது. தற்போது, வார இறுதி நாட்களில், வெள்ளி முதல் திங்கள் கிழமை வரை, சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மழை தொடர்வதால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சில சுற்றுலா ஸ்தலங்கள் மூடப்பட்டன. இதனால், மலை ரயில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் கட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி