பூத்து குலுங்கும் கொன்றை மலர்கள்; ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்
கூடலுார்; முதுமலை, கூடலுார் பகுதியில் பூத்து குலுங்கும் சரக்கொன்றை மலர்கள், கேரளா சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.தமிழகத்தின் மாநில மலராக செங்காந்தள் மலர்கள் உள்ளது. அதேபோல, கேரளா மாநிலத்தின் மாநில மலராக இருப்பது மஞ்சள் நிறத்திலான கொன்றை மலர்கள். மேலும், இவை கேரள மக்களின் விஷு பண்டிகையின் போது, இந்த மலர்களை வைத்து பூஜை செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தற்போது, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிகள், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரம்; கோவில்கள் மற்றும் வீடுகளில் உள்ள மரங்களில் மஞ்சள் வண்ணத்திலான சரக்கொன்றை மலர்கள் பூத்து குலுங்குகிறது. வறட்சியான சூழலில் உள்ள இப்பகுதியில், பூத்து குலுங்கும் சரக்கொன்றை மலர்கள் உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் வியப்படைய செய்துள்ளதுமக்கள் கூறுகையில், 'கேரளா மாநிலத்தில் இந்த பூக்கள் பல கோவில்களில் தல விருட்சிகமாக உள்ளன. இவை கோடை காலத்தை வரவேற்கும் விதமாக பூத்து குலுங்குகின்றன. கோடை சீசனுக்கு வரும் பயணிகளை இந்த மலர்கள் வெகுவாக கவர்ந்து வருகின்றன,' என்றனர்.