மேலும் செய்திகள்
படகு சவாரி தற்காலிக நிறுத்தம்
12-Dec-2024
ஊட்டி; பைக்காரா ஏரியில் சுற்றுலா பயணியர் இதமான காலநிலையை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர் பைக்காரா ஏரியில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகை தருகின்றனர். இங்கு சுற்றுலா பயணியர் வசதிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பயணிகளை குதுாகலப்படுத்தும் வகையில் 'ஸ்பீடு' போட்டும் இயக்கப்பட்டு வருகிறது. வார நாட்களை ஒட்டி இங்குள்ள இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். பைக்காரா ஏரியின் கரையோரத்தில் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகளை ரசித்தவாறு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
12-Dec-2024