உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தீபாவளி பண்டிகை பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர்

தீபாவளி பண்டிகை பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர்

ஊட்டி: தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் ஊட்டியில் திரண்டனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட கேரளா, கர்நாடகா மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணியர் ஊட்டிக்கு வந்துள்ளனர். ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா, சூட்டிங் மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் நேற்று, சுற்றுலா பயணியர் கூட்டம் கணிசமாக அதிகரித்து இருந்தது. மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து, சுற்றுலா பயணியர் மகிழ்ந்தனர். ஏரியின் நடுவே செயற்கை நீர்வீழ்ச்சியை ரசித்தனர். குறிப்பாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர் அங்குள்ள பிரதான புல் தரை மைதானத்தில் குடும்பத்தாருடன் ஆடி, பாடியதுடன் பூங்காவில் மலர் செடிகள் இடையே செல்பி, போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி