உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேதமான சாலையை சீரமைக்க வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

சேதமான சாலையை சீரமைக்க வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

பந்தலுார் : பந்தலுார், கூடலுார் தாலுகா அனைத்து வணிகர் சங்க கூட்டம் நடந்தது.சங்க தலைவர் அஷ்ரப் வரவேற்றார். பந்தலுார் தாலுகா அளவிலான சங்க உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, 'கடைகளில் போதை வஸ்து மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய கூடாது; பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்; கால்நடைகளை பஜார் பகுதியில் மேய விடுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்; பந்தலுார் மற்றும் கூடலுார் அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும்; கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் அரசு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்,' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் தாமஸ், மாநில துணை செயலாளர் ரசாக், நீலகிரி மாவட்ட தலைவர் முகமது பாரூக், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் லியாகத் அலி உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ