மேலும் செய்திகள்
குன்னுாரில் கனமழை முறிந்து விழுந்தன மரங்கள்
05-Nov-2024
குன்னுார் ; குன்னுாரில் பெய்த மழையில் கடந்த, 3 நாட்களுக்கு முன்பு, மேட்டுப்பாளையம் சாலை, காந்திபுரம் அருகே பாறை விழுந்தது. அதனை பொக்லைன் உதவியுடன் அகற்றிய போதும், அருகில் மற்றொரு பாறை அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்தது. நேற்று முன்தினம் அந்த பாறையும் விழுந்தது. நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் உதவியுடன் அதனை அகற்றினர்.இதனால், மாலையில், 40 நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. அதன்பின் போக்குவரத்து சீரானது.
05-Nov-2024