உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  லாரியின் மீது விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

 லாரியின் மீது விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

குன்னுார்: குன்னுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் வெயில் நிலவி வந்த நிலையில், நேற்று திடீரென சாரல் மழை பெய்தது. இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணி அளவில், குன்னுார்- - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை காணிக்கராஜ் நகர் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது, மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால், ஊட்டி குன்னுார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு துறையினர், பொது மக்கள், போலீசார் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !