உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போலீசார் அமைத்த தடுப்பால் வாகன விபத்து அபாயம்

போலீசார் அமைத்த தடுப்பால் வாகன விபத்து அபாயம்

கோத்தகிரி,;கோத்தகிரி பஸ் நிலையத்தில், போலீசார் அமைத்த தடுப்பில், இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.கோத்தகிரி பேரூராட்சி, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சிக்கான அடிப்படை வசதிகள் இங்கு இல்லை. குறிப்பாக, 'பார்க்கிங்' வசதி, எட்டாக்கனியாக உள்ளது. நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஏதுவாக, பஸ் நிலையம் முதல், மார்க்கெட் வரை போலீசார், தடுப்புகள் அமைத்துள்ளனர்.பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில், நகராட்சி எதிர்புறத்தில், பல மாதங்களுக்கு முன்பு, வாகனங்கள் நிறுத்தாதவாறு, 'வெல்டிங் ராடு' நடவு செய்து, கம்பிகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், தனியார் வாகனங்கள், 'பார்க்கிங்' செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, சாலையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போலீசார் அமைத்த, வெல்டிங் ராடு முழுவதும், சாய்ந்தும், கம்பிகள் அறுந்து காணப்படுகிறது. நடந்து செல்வோர் கம்பியில் சிக்கி தடுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் சென்று வருவோர், கம்பியில் சிக்கி விழுந்து காயம் ஏற்பட்டு வருகிறது. எதிர்வரும் நாட்களில், கோடை விழா துவங்க உள்ள நிலையில், வாகனங்களின் எண்ணிக்கை பஸ் நிலையம் பகுதியில் அதிகரிக்கும். மக்கள் கூறுகையில், 'குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து போலீசார், அறுந்து விழுந்த கம்பிகளை சீரமைப்புடன், நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ