மேலும் செய்திகள்
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
02-Mar-2026
குன்னூர்: குன்னூர் டி.டி.கே. சாலையில் மரம் விழுந்ததில், மின்கம்பம் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது. குன்னூரில் கடும் வெயில் வாட்டி வருகிறது. நேற்று காலை 6:30 மணியளவில், காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதில், குன்னூர் - டி.டி.கே சாலையில், மரம் விழுந்தது. இதில் மின் கம்பம், சேதமடைந்தது. இதனால், ஆப்பிள் பி, வண்ணாரபேட்டை உட்பட பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் மரத்தை பவர் ஷா உதவியுடன் அறுத்து அகற்றினர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டனர். இதனால், காலை 11 மணியளவில் மின்வினியோகம் சீரானது.
02-Mar-2026